கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.
கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தனது இளமைக் காலத்திலேயே மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த மோகன் இப்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஒரு டான் வேடத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய் ஸ்ரீ இயக்கிய தாதா 87 படத்தில் சாருஹாசன் ஒரு டான் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.