Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி 2 வேட்டையன் கதாபாத்திர லுக்… இன்று வெளியீடு!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:17 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்து கலக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.  கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று படத்தின் முக்கியக் கதாபாத்திரமான வேட்டையன் கதாபாத்திர லுக்கை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments