2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்து கலக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினர் ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை வடிவேலு நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.