சந்திரமுகி 2 முதல் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (08:35 IST)
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

முதல் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகா நடித்து கலக்கி இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.  கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments