ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள காலா படத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டடுமென்றே கிளியரன்ஸ் லெட்டரை தர மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு படத்திற்கு சென்சார் வழங்குவதற்கு முன்னர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து கிளியரன்ஸ் டெல்லர் வழங்க வேண்டும். அதன் பிறகு படம் சென்சாருக்கு சென்று அதன் பின்னர் திரையரங்குகளில் வெளியிடப்படும்.
அந்த வகையில் காலா படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என பட தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்தார். இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிப்பாளர் சங்கத்தில் மனு அளிக்கப்பட்டதாம்.
ஆனாலும், தயாரிப்பாலர்கள் சங்கம் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால், சென்சார் தாமதமாவதோடு பட ரிலீஸும் தள்ளிப்போகக்கூடும்.
இந்நிலையில், காலாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டும் என்றே தாமதம் செய்கிறது என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காலா படத்தை சேர்ந்த பிரதினி ஒருவர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் எங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போரட்டம் குறித்து கவலை இல்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சமபவம் குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் விரைவில் ரஜினியை சந்திக்க கூடும் என தெரிகிறது. இது குறித்து ரஜினி என்ன சொல்ல போகிறார் என்பது பலரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.