Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்: நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்!

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:52 IST)
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகள் கவிதா ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் கவிதா ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை

இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை செய்தபோது டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுப்பதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது

 இன்று டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிபிஐ தரப்பில் இந்த மாதம் முன் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னுடைய கைது சட்ட விரோதம் என்றும்  எனக்கு தொடர்பு இல்லாத கேள்விகளை கேட்டதால் தான் நான் பதில் அளிக்கவில்லை என்றும் கவிதா தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் இந்த வழக்கில் கவிதா தரப்பு வாதம் அடுத்து நடைபெற உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்!

மாறி மாறி அறிக்கை விடுவதற்கு ஏன் கோர்ட்டுக்கு வருகிறீர்கள்.. ரவி மோகன், ஆர்த்தியை கண்டித்த நீதிபதி..!

நயன்தாராவை கொஞ்சம் விசாரிச்சா எல்லா உண்மையும் வெளியே வந்துடும்: ரத்தீஸ் குறித்து மாரிதாஸ்

கூலி படத்துக்கு யானை விலை சொல்லும் சன் பிக்சர்ஸ்… தயங்கும் விநியோகஸ்தர்கள்!

நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்.. ஆர்த்தி ரவியை மறைமுகமாக தாக்கினாரா கெனிஷா?

அடுத்த கட்டுரையில்
Show comments