Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாவில் ஆபாச கருத்து: 48 பேர் மீது வழக்கு.. 3 பேர் கைது..!

Siva
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (09:33 IST)
நடிகை ரம்யா குறித்து இன்ஸ்டாகிராமில் அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைதள வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் சிக்கினார். இது குறித்து நடிகை ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ரம்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தர்ஷனின் ரசிகர்கள் தகாத வார்த்தைகளையும், ஆபாசமான கருத்துகளையும் கமென்ட் பகுதியில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து ரம்யா அளித்த புகாரின் பேரில், ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்து தெரிவித்த 48 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
விசாரணை: கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், தர்ஷன் ரசிகர் மன்ற நிர்வாகி என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த விவகாரத்தில் இன்னும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments