இரண்டாம் குத்து படத்தின் டீசரை நீக்க சொல்லி வழக்கு – படக்குழுவினருக்கு நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (17:38 IST)
இரண்டாம் குத்து படத்தின் டீசரை இணையதளத்தில் இருந்து நீக்கவேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் படக்குழுவினருக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பி கிரேட் திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அதில் கதாநாயகனாக முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் டீசர் ஆகியவை சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதில் ஆபாசம் அதிகமாக இருப்பதாக் சொல்லி படத்தைத் தடை செய்ய சொல்லி சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை இணையத்தில் இருந்து நீக்கவேண்டும் என மதுரை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி கிருபாகரன், யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கை குழுவை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையை எதிர் மனுதாரராக இணைத்து  மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் இரண்டாம் குத்து படடத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது.. பிரதீப் ரங்கநாதனின் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

முதல் நாளே வெளியேறுகிறாரா வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்? பொருத்தமில்லாதவர் என வாக்குகள்..!

வித்தியாசமான உடையில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த படத்தின் ஷூட்டிங்குக்குத் தயாரான சூர்யா!

அடுத்த கட்டுரையில்