Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்கி படம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது… அரசியல் தலைவர் புகார்!

Advertiesment
கல்கி படம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது… அரசியல் தலைவர் புகார்!

vinoth

, செவ்வாய், 23 ஜூலை 2024 (14:16 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் பிரபாஸ் பாகுபலி 2 படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கல்கி படத்தின் மீது முன்னாள் காங்கிரஸ் கட்சி பிரமுகர் கல்கிதாம் மடாதிபதி ப்ரமோத் கிருஷ்ணம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் “கல்கி அவதாரம் குறித்து புராணங்களில் சொல்லப்பட்டதற்கு மாறாக கல்கி படத்தில் காட்டப்பட்டுள்ளது” எனக் கூறி படத்தில் நடித்த பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் இயக்குனர் நாக் அஸ்வின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

57வது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருது 2024 இல் வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான வெண்கலப் பதக்கத்தை வென்ற ‘பராரி’