Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் படம் 2; ஓவியாதான் நடிக்க வேண்டும் : இயக்குனருக்கு வந்த கோரிக்கை

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (21:06 IST)
இயக்குனர் சி.எஸ். அமுதன் அடுத்த இயக்கவுள்ள தமிழ் படம் 2ம் பாகத்தில், நடிகை ஓவியாவை நடிக்க வைக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கை வந்துள்ளதாம்.


 

 
தமிழ் சினிமாவில் உள்ள அபத்தமான காட்சிகளையும் கிண்டலடித்து எடுக்கப்பட்ட அந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம்  ‘தமிழ் படம்’. இதில் நடிகர் சிவா ஹீரோவாக நடித்திருந்தார். அப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 
 
அதன் பின் அமுதன் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால், சில காரணங்களால் அப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில், மீண்டும் சிவாவை வைத்து தமிழ் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கவுள்ளார் அமுதன். 
 
இந்நிலையில், இந்த படத்தில் ஓவியாவை நடிக்க வைக்க வேண்டும் என பலருடம் டிவிட்டரில் அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் “தமிழ் படம் 2ம் பாகத்தில் ஓவியா நடிக்க வைக்க வேண்டும் என பலரும் என்னிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுபற்றி ஓவியவிற்கு தெரியப்படுத்துவேன். அவருக்கு விருப்பம் இருக்கிறா எனப் பார்ப்போம்” என டிவிட் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகை சமந்தாவின் வீட்டில் நடந்த துயரம்.. திரையுலகினர் இரங்கல்..!

ஷில்பா ஷெட்டி கணவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை: என்ன காரணம்?

ரித்து வர்மாவின் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்!

அனிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments