Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷாரூக் கான் பிறந்தநாளை கொண்டாடிய புர்ஜ் கலீபா: வைரல் வீடியோ!

Advertiesment
ஷாரூக் கான் பிறந்தநாளை கொண்டாடிய புர்ஜ் கலீபா: வைரல் வீடியோ!
, ஞாயிறு, 3 நவம்பர் 2019 (11:22 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானின் பிறந்தநாளில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா லேசர் விளக்குகளால் வித்தியாசமான முறையில் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகர் ஷாரூக்கானின் 54வது பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகமெங்கும் உள்ள ஷாரூக்கான் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் ட்விட்டரில் ஹேஷ்டேகுகள் இட்டு ட்ரெண்ட் செய்தனர். பல இந்திய திரை பிரபலங்களும், உலக திரை பிரபலங்களும் ஷாரூக்கானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உலகின் மிக உயரமான கட்டிடம் என புகழப்பட்டும் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா ஷாரூக்கானை வாழ்த்தும் வகையில் தன் கட்டிடத்தில் லேசர் விளக்குகளால் ‘Happy Birthday Shah Rukh Khan – The King of Bollywood Cinema” என அலங்கரித்துள்ளனர். இதை பலர் வீடியோ எடுத்து ட்விட்டரில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.

இதை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஷாரூக்கான் ”எனது சகோதரர் முகமது அலாபருக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார். புர்ஜ் கலிபாவின் உரிமையாளர்தான் இந்த முகமது அலாபர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மிஸ் செய்த படத்தின் டைட்டிலை அறிவித்த கவுதம் மேனன்!