டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வகை போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தனது அபார பந்துவீச்சு காரணமாக உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் பேட்ஸ்மேன்களை தனது பந்துவீச்சால் திணறடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, அதன்பின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் அனைத்து வகைப் கிரிக்கெட் போட்டியிலும் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 38 வயதாகும் 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பதும் அவர் 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை மூன்று போட்டிகளிலும் சேர்ந்து எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸில் அவரோடு விளையாடிய ஜாஸ்ப்ரீத் பூம்ரா மலிங்காவுக்கு உங்கள் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு உதாரணமாக உள்ளது. உங்கள் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துகள். உங்களோடு இணைந்து விளையாடியது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.