Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை வெளியாகிறது நெஞ்சுக்கு நீதி ட்ரெய்லர்! – போனி கபூர் அறிவிப்பு!

நாளை வெளியாகிறது நெஞ்சுக்கு நீதி ட்ரெய்லர்! – போனி கபூர் அறிவிப்பு!
, வியாழன், 10 பிப்ரவரி 2022 (13:29 IST)
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் “ஆர்டிக்கிள் 15”. இந்த படம் தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். தமிழில் இந்த படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் வலிமை ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை இந்த படத்தின் ட்ரெய்லர் மதியம் 12.30 மணிக்கு வெளியாவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடி அழகா சிரிச்ச முகமே... லாஸ்லியாவின் கியூட்னஸை ரசிக்கும் ரசிகர்கள்!