Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படி இருந்த நடிகை..? தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலை! – வைரலாகும் வீடியோ!

Advertiesment
Nupur Alankar
, திங்கள், 10 அக்டோபர் 2022 (13:57 IST)
இந்தியில் பிரபல நடிகையாக இருந்த நுபுர் அலங்கார் தெருவில் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தியில் சின்னத்திரை நாடகங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நுபுர் அலங்கார். சின்னத்திரையில் 90களில் பிரபலமாக இருந்த சக்திமான் சூப்பர் ஹீரோ தொடரில் நடித்தவர் இவர்.

சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாது ராஜா ஜி, சாவாரியா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீவத்சவாவை திருமணம் செய்து கொண்ட இவர் மும்பையில் வசித்து வந்தார்.


இந்நிலையில் சமீபத்தில் நுபுர் அலங்கார் தெருக்களில் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நுபுர் அலங்கார் அவரேதான் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார். அவர் பிச்சை எடுப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்த அவர் “சில காலமாக குடும்பத்தில் பிரச்சினைகள் இருப்பதால் என் குருவின் ஆலோசனைப்படி சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டுள்ளேன். பிச்சை எடுப்பதால் கிடைக்கும் பணத்தை வைத்துதான் வாழ்க்கை ஓடுகிறது” என கூறியுள்ளார். அவரது இந்த முடிவு பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விளக்கம் கேட்கப்படும்: அமைச்சர் மா சுப்பிரமணியன்