Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வருடம் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ப்ளு சட்ட மாறனின் ஆண்ட்டி இந்தியன் திரைப்படம்!

vinoth
புதன், 28 பிப்ரவரி 2024 (14:58 IST)
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை யூட்யூபில் விமர்சனம் செய்து பிரபலம் ஆனவர் ப்ளூசட்டை மாறன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தை எழுதி, இயக்கினர். இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது சில காட்சிகளை வெட்ட சொல்லி வலியுறுத்தியும், அவற்றை வெட்டாமல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று படம் வெளியானது.

திரையரங்குகளில் வெளியான போது சுமாரான வசூலையே இந்த படம் பெற்றதாக சொல்லப்பட்டது.. ஆனால் சிறிய பட்ஜெட் படம் என்பதால் மற்ற வழிகளில் லாபம் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு படத்தின் இயக்குனர் மாறன் அளித்த பதிலில் ‘திரையரங்குகளில் சரியாக போகவில்லை என்பது உண்மைதான். ஆனால் சேட்டிலைட் உரிமைக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. பிறமொழிகளில் டப்பிங் உரிமைக் கேட்கிறார்கள். இது எந்த படத்தின் காப்பியும் இல்லை. இது ஒரு உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்துக்கான இரண்டாம் பாகத்துக்கான கதையே என்னிடம் உள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களையே கொடுத்தனர். ஆனால் சமூக ஊடகங்களில் அதிகமாக எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்தன’ எனக் கூறியிருந்தார்.

திரையரங்குகளில் வெளியாகி இரண்டு ஆண்டுகளாக எந்த ஓடிடியிலும் வெளியாகாத இந்த படம் தற்போது ஜியோ சினிமாஸில் வெளியாகியுள்ளது. இதை ப்ளு சட்ட மாறன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments