Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 வயது குழந்தக்கு ஹெச்.ஐ.வி நோயாளியின் ரத்தம்..போலீஸார் வழக்குப் பதிவு

Advertiesment
Blood of HIV patient
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (19:01 IST)
தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராம்பள்ளியைச் சேர்ந்த 3 வயது ஆண் குழந்தைக்கு தலசீமியா என்ற நோய் பாதிப்புள்ளதால் அங்குள்ள செஞ்சிலுவை சங்க ரத்த வங்கியின் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்படுகிறது.

இதன்படி கடந்த ஜூலை 20 ஆம் தேதி குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பின் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதைக் கண்டறிந்தனர்.

ரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியில் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து நல்லகுண்டா போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் அனுமதி!