இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரின் பிறந்தநாள் ! குவியும் வாழ்த்துகள்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (16:34 IST)
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவியது.

 இந்தியாவில் ஊரங்கு உத்தரவு 140 நாட்களாக நீடித்தது. சீனாவை அடுத்து அதிக மக்கள் தொகை (138 கோடி ) பரப்பளவு கொண்ட இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

அப்போது பிரதமரின் பிஎம் கேர் நிதிக்காக  பிரபல ஹிந்தி நடிகர் அக்‌ஷய் குமார் கொரோனா தடுப்புக்காக தனது சேமிப்பில் இருந்து ரூ. 25 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, தாராளமாக நிதி உதவி வழங்க கோரியிருந்த நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார். ரூ. 25 கோடி வழங்கினார். அடுத்து ஏராளமான உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அவருக்கு இன்று ஐம்பத்து மூன்றாவது பிறந்தநாள் ஆகும். எனவே பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவார். இவர் ஒரு படத்திற்கு ரூ. 100 கோடிக்கு மேம் சம்பளம் பெறுகிறார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments