Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐமேக்ஸில் முதல் தமிழ் திரைப்படம் ”பிகில்” தான்..

Advertiesment
ஐமேக்ஸில் முதல் தமிழ் திரைப்படம் ”பிகில்” தான்..

Arun Prasath

, வியாழன், 24 அக்டோபர் 2019 (12:12 IST)
ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் விஜய் நடித்து வெளிவரவுள்ள “பிகில்” தான் என கூறப்படுகிறது.


ஐமேக்ஸ் என்ற தொழில்நுட்பம் மிகவும் நவீன வசதிகள் கொண்ட திரையரங்கு தொழில்நுட்பம் ஆகும். அதி நவீன திரைப்பட தரமும், மிக அதிகமான ratio (1.43:1.90:1) கொண்ட பெரிய திரைகள், நவீன தொழிநுட்ப film projector-கள் ஆகியவைகள் அடங்கிய திரையரங்கமே ஐமேக்ஸ். இந்த திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் இதற்கு முன் அனுபவிக்காத, வியப்பூட்டக்கூடிய திரைப்பட அனுபவத்தை பெறுவார்கள்.
webdunia

ஐமேக்ஸ் திரையரங்கம் உலகில் பல இடங்களில் இருந்தாலும், சென்னையில் வேளச்சேரி லூக்ஸ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் முதல் படமாக ஜேம்ஸ் பாண்டின் ஸ்பெக்டேட்டர் திரைப்படம் திரையிடப்பட்டது. அதன் பின்பு சென்னை வட பழனியில் உள்ள ஃபோரம் விஜயா மாலில் பலாஸோ திரையரங்கில் தொடங்கப்பட்டது. அதில் Ant Man and the wasp திரைப்படம் முதல் படமாக திரையிடப்பட்டது.

இந்நிலையில் வடபழனி பலாஸோவில் ஐமேக்ஸ் திரையரங்கில் விஜய் நடித்து வெளிவரவுள்ள ”பிகில்” திரைப்படம் வெளியாகவுள்ளது. இது தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என தெரியவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமென்மேன் பத்தாது ஹீரோ வேணும்... சீரியஸ் ஹீரோவாக சிவகார்த்திகேயன்!! டீசர் இதோ...