Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவின் ஜோடியாகும் பிகில் நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (20:30 IST)
'பிக்பாஸ் 3' நிகழ்ச்சியிn போட்டியாளர்கள் ஒருசிலர் அந்நிகழ்ச்சி முடிந்ததும் பல திரைப்படங்களில் பணியாற்றி வருவது தெரிந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்ற நிலையிலும் அவருக்கு எந்தவித வாய்ப்பும் இல்லாமல் இருந்தது 
 
இந்த நிலையில் முதல்முதலாக கவின் ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர், கவின் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அம்ரிதா ஐயர், ‘பிகில்’ திரைப்படத்தின் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்து இருந்தார் என்பதும் இவரது நடிப்பை விஜய்யே நேரடியாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கவின், அம்ரிதா ஐயர் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்து விட்டதாகவும், இதுகுறித்த தகவல்கள் நாளை வெளியாக இருக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் வெளிவரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments