Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மிகப்பெரிய ஓபனிங்...'' வசூல் சாதனைப் பட்டியலில் ராகவா லாரன்ஸின் படம் !

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:07 IST)
நடிகர் அக்‌ஷய்குமார் - அட்வானி கியாரா  நடிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லக்‌ஷ்மி. இப்படம் காஞ்சனா படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலான நிலையில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி  Disney HotStar- ல் இப்படம் வெளியானது.
 
இந்நிலையில் பார்க்கும் இடமெல்லாம் இப்படத்தின் பேச்சுதான் என்பது போல் அனைவரும் அக்‌ஷகுமாரின் நடிப்பையும், ராகவா லாரன்ஸி
ன் இயக்கத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தைக் குறித்து மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை ''டிஸ்னி ஹாட் ஸ்டார்'' ஓடிடி தளத்தில் வெளியான படங்களிலேயே மிகப் பெரிய ஓபனிங் செய்த படம் மற்றும் வசூல் சாதனை பெற்றுள்ள படம் என்ற சாதனையை பாலிவுட்டில்  ’லட்சுமி’ படம் படைத்து  முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. ரசிகர்கள் இதனை ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ’’பம் போலே’’ என்ற பாடலில் அக்‌ஷய்குமார் 100 திருநங்கைகளுடன் இணைந்து நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments