பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து விரைவில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பு ஆக உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் கடந்த ஐந்து சீசன்களில் புகழ் பெற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்களுடைய தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 10 போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அவர்களது பெயர் இதோ:
வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ்.