Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 லட்சத்தை தாண்டிவிட்ட ரித்விகா: டைட்டில் உறுதியாகிறது.

Advertiesment
24 லட்சத்தை தாண்டிவிட்ட ரித்விகா: டைட்டில் உறுதியாகிறது.
, திங்கள், 24 செப்டம்பர் 2018 (21:54 IST)
பிக்பாஸ் இறுதி போட்டிக்கு ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி மற்றும் ஜனனி ஆகிய நால்வர் தகுதி பெற்றிருந்தாலும் சற்றுமுன் வரை வெளியான வாக்குப்பதிவின் தகவலின்படி ரித்விகாவிற்கு 24 லட்சத்து 71 ஆயிரத்து 705 வாக்குகள் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக உள்ள ஐஸ்வர்யாவுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 810 வாக்குகள் கிடைத்துள்ளது. விஜயலட்சுமிக்கு சுமார் 7.5 லட்சம் வாக்குகளும், ஜனனிக்கு சுமார் 6 லட்சம் வாக்குகளும் கிடைத்துள்ளது.

எனவே தற்போதைய நிலையின்படி ரித்விகாவிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. ஜனனி கிட்டத்தட்ட போட்டியை விட்டு வெளியேறிவிட்டதாகவே தெரிகிறது. விஜயலட்சுமியும் இனிவரும் நாட்களில் பெரும் வாக்கு வித்தியாசத்தை வெற்றி கொள்வது சிரமம்தான்

webdunia
எனவே தற்போது விஜயலட்சுமி, ஜனனி ஆதரவாளர்களும் ஜெயிக்க வாய்ப்பு இருக்கும் ரித்விகாவிற்கு வாக்குகள் பதிவு செய்ய முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. எனவே இதே ரீதியில் நியாயமாக வாக்குப்பதிவு நடந்தால் ரித்விகா 'பிக்பாஸ் 2' டைட்டிலை வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதனை படைத்த 'சர்கார்' நாயகன் சிம்டாங்காரன்!