Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் அறிவிப்பு: குவியும் வாழ்த்துக்கள் மற்றும் வாய்ப்புகள்!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (07:37 IST)
தமிழ் பிக்பாஸ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 முடிவுக்கு வந்துள்ளது
 
தமிழைப் போலவே 16 போட்டியாளர்களுடன் அறிமுகமான இந்த சீசன் தற்போது முடிவுக்கு வந்து அதில் நடிகர் அபிஜித் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் நாள் முதலே அபிஜித்துக்கு தீவிர ரசிகர்களின் ஆதரவு குவிந்து கொண்டே வந்தது என்பதும் அவரது ஆர்மியினர் அவர் ஒவ்வொரு முறை நாமினேட் செய்யப்படும்போது வாக்குகள் அளித்து காப்பாற்றிக் கொண்டே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அபிஜித் ஆர்மியினர் ஆசைப்படி அவர் தற்போது டைட்டில் வின்னர் ஆக மாறி உள்ளார். பிக்பாஸ் தெலுங்கு ஃபைனல் நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆன நடிகர் அபிஜித்துக்கு கோப்பையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அபிஜித்துக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்த வருகிறது
 
பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் அறிவிப்பு
கடந்த 2012 ஆம் ஆண்டு ’லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற படத்தில் அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த அபிஜித், தற்போது கதாநாயகனாக இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஒரு வெப் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன பிக் பாஸ் சீசன் டைட்டில் வின்னர் அபிஜித்துக்கு இனி தெலுங்கு திரையுலகில் நல்ல காலம் தான் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments