Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேற்று வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு இவ்வளவு சம்பளமா?

robert
, திங்கள், 28 நவம்பர் 2022 (14:43 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு ரூபாய் 14 லட்சம் சம்பளம் வழங்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 50 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கிட்டத்தட்ட அனைவருமே புதுமுகங்கள் என்பதால் மிக குறைவான சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
வாரத்திற்கு 20,000 முதல் 30,000 ரூபாய் வரை பெரும்பாலான போட்டியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டருக்கு வாரம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்றும் அவர் 7 வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை அடுத்து அவருக்கு சம்பளமாக 14 லட்ச ரூபாய் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ராபர்ட் மாஸ்டர், நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த சன் டிவியின் ரோஜா சீரியலுக்கு சுபம்!