Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலித்தவர் ஏமாற்றினாரா? பிக்பாஸ் ஜூலி சென்னை காவல்நிலையத்தில் புகார்!

Advertiesment
காதலித்தவர் ஏமாற்றினாரா? பிக்பாஸ் ஜூலி சென்னை காவல்நிலையத்தில் புகார்!
, சனி, 4 டிசம்பர் 2021 (10:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சென்னை போலீசில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டவர் ஜூலி என்பதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்றவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மோசமான போட்டியாளர் என்று பெயரெடுத்த ஜூலி ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜூலி தற்போது சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் 
 
ந்த புகாரில் மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளதை அடுத்து அவரது புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரெளபதி இயக்குனரின் அடுத்தபடம்: இன்று அறிவிப்பு!