சொந்தக்கதை சோகக்கதை எப்போது முடியுமோ?
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் இரண்டு நாட்கள் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென போட்டியாளர்கள் அறிமுகம் என்ற பெயரில் சொந்தக் கதை சோகக் கதையைச் சொல்லி வருகின்றனர். அவர்கள் பட்டதாக கூறப்படும் கஷ்டத்தை எல்லாம் பார்க்கும் போது பெரிய சவாலை சந்தித்து அவர்கள் வந்தது போல் தெரியவில்லை. ஆனால் அதை ஏதோ இமயமலையை தாண்டியது போல் அவர்கள் பில்டப் செய்து கூறுவது பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது
குறிப்பாக ஷிவானி நாராயணன், அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கூறிய கதைகள் கிட்டத்தட்ட போரடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் சொந்தக் கதை சோகக் கதையை முடித்துவிட்டு வழக்கமான நிகழ்ச்சியை தொடங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது
இந்த நிலையில் நேற்று சனம்ஷெட்டி மற்றும் பாலாஜி முருகேசன் இடையே சின்ன சண்டை ஆரம்பித்தது. ஏற்கனவே அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி சண்டை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. இதேபோல் ரேகா மற்றும் சனம்ஷெட்டி இடையே மீண்டும் ஒரு புகைச்சல் தொடங்கியுள்ளது
மொத்தத்தில் அடுத்த வாரம் முதல் சுறுசுறுப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது