Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (12:01 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டிவிட்ட நிலையில், இறுதிக் கட்டத்தில் இருப்பதால் விறுவிறுப்பு அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், அதன் பின் ஆறு போட்டியாளர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தனர். தற்போது 13 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இன்று நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஞ்சித், ரயான், மஞ்சரி ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்ற நிலையில், இவர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்ற ரஞ்சித் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிப்போட்டிக்கு இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், மீதமுள்ள 12 போட்டியாளர்களில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுபவர் யார்? அவர்களில் பட்டம் பெறுபவர் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி கமல் இணையும் படத்தை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

'மனுஷி’ திரைப்படத்தை நானே பார்க்கிறேன்.. அதன்பின் தீர்ப்பு.. சென்னை ஐகோர்ட் நீதிபதி..!

யாஷின் டாக்ஸிக் படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்?

தெலுங்கில் மட்டும் 60 கோடி ரூபாய் நஷ்டம் வருமா?... விநியோகஸ்தரை ஏமாற்றிய ‘வார் 2’!

உங்களுக்கு வயசாயிடுச்சு அதனால் ஓய்வெடுங்கள்- ரசிகரின் அட்வைஸுக்கு ஷாருக் கானின் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments