பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று வருகிறது. பிரபலங்கள் இடையே போட்டி மற்றும் மனக்கசப்பு வருவது ஒன்றும் புதிய விஷயமல்ல. தினந்தோறும் யாராவது இருவர் இடையே சண்டை வருவது சாதாரணமாகிவிட்டது.
நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் குழுவாக பிரிந்து பாட்டு, நடனம், நாடகம் என தங்கள் திறமைகளை மேடையில் அரங்கேற்றினர். இதனி தொடர்ந்து நடிகர் சக்தி தல அஜித்தின் பாடலுக்கு ஆடினார், அதனால் அவருக்கு விருது கொடுக்கப்பட்டது. அதற்கு ஆர்த்தி, "எங்க தல பாட்டுக்கு ஆடியதால் தான் விருது கிடைத்தது" என குண்டு ஆர்த்தி சொல்ல, உடனே சக்திக்கு கோபம் வந்துவிட்டது.
இதனால் கடுப்பான சக்தி "அப்போ நாங்க சரியா ஆடலையா?" என கேட்டுவிட்டார். அதற்கு பதில் கூறிய ஆர்த்தி "தலயோட டான்ஸ் ஸ்டெப்பை காபி அடித்து தானே ஆடினீர்கள்" என சொன்னார். அதனால் வரும் நாட்களில் இருவர் இடையே பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.