Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் நண்பனின் வீட்டுக்கு சென்ற சித்தப்பு - நெகிழவைக்கும் புகைப்படம்!

Advertiesment
பிக்பாஸ் நண்பனின் வீட்டுக்கு சென்ற சித்தப்பு - நெகிழவைக்கும் புகைப்படம்!
, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (16:34 IST)
பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறியதால் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது. 


 
பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போது அவர் நெருங்கி பழகியது சாண்டியிடம் தான். அவர் இருவரும் சேர்ந்து செய்யத அலப்பறை இல்லை. மேலும் சரவணனுக்கு எதாவது பிரச்சனை என்றால் சாண்டி முன்னின்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். அவர் வெளியேற்றப்பட்ட போது சாண்டி கதறி அழுது புலம்பினார்.

webdunia

 
இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன் சமீபத்தில் தனது குடும்பத்துடன் நண்பன் சாண்டியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.  சாண்டியின் மகளான லாலாவுடன்சரவணன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.  ஒரு சில நாட்களே பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் அவர்களது உண்மையான நட்பை இந்த புகைப்படம் உணர்த்துகிறது என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கக்கூஸ் குரூப் கதறல் இனிதே ஆரம்பம் - தலைவரான தன்மானத்தலைவி!