பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினம் ஒரு டஸ்க் கொடுத்து நாளுக்கு நாள் செம்ம பரபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஓவியாவுக்கு தான் பார்வையாளர்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.
இந்நிலையில் நேற்று ஓவியா பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் செய்யாமல் தன்னால் முடியாது என்று கூறி மறுத்து விட்டார். இதனை தொடர்ந்து ஆரவ் பின் விரட்டி விரட்டி காதலித்தார். இதனால், ரசிகர்களுக்கே கொஞ்சம் கோபம், வர பிக்பாஸ் குடும்பம் தற்போது ஒரு முடிவு எடுத்துள்ளது. ஓவியா செய்வது எதுவும் சரியில்லை இனி ஓவியாவுடன் யாருமே பேசக்கூடாது என்பதுதான் அது. எல்லோரும் ஓவியாவை ஒதுக்க, ஓவியா பதிலுக்கு அனைவரையும் பார்த்து ‘மகிழ்ச்சி’ என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கையில் ஓவியாவை வெளியேற்றும் முயற்சிதான் இதுவா என தோன்றுகிறது.