Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகத்துடன் பைக்கில் ஊர் சுற்றும் யாஷிகா! திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்களா!

Advertiesment
மகத்துடன் பைக்கில் ஊர் சுற்றும் யாஷிகா! திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்களா!
, சனி, 13 ஏப்ரல் 2019 (13:43 IST)
பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர்கள் நடிகை ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா தான். நிகழ்ச்சியின் போது தனக்குள் ஏற்பட்ட காதலை மஹத்திடம் யாஷிகா வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அதனால் நிகழ்ச்சியின் பேசுபொருளாக இருவரும் மாறியிருந்தனர். நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின்பும் இருவரும் அவ்வப்போது ஒன்றாக தென்படுகின்றனர். 


 
ஆனால், மஹத் பராச்சி மிஸ்ரா என்ற மாடல் அழகியை காதலித்து வந்ததால் யாஷிகாவின் ஆசை வீணாக போனது. இருப்பினும் இவர்கள் இருவருக்குள்ளும்  ஒரு விதமான ரொமான்ஸ் ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்தவகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர்கள் இருவரும் நெருக்கமான பழகி வருகின்றனர். 

webdunia

 
இந்த நிலையில் தற்போது மஹத் மற்றும் யாஷிகா பைக்கில் ஊர் சுற்றும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவியது. ஆனால், இந்த புகைப்படம் இயக்குனர்கள் மகேஷ் - வெங்கடேஷ் இணைந்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கபட்டது என்று பின்னர் தெரியவந்தது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 வயதில் இருந்தே டார்ச்சர்.. பிரபல நடிகையின் உருக்கமான டிவிட்