Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாக்லெட் கொடுத்து கண் அடித்த கமல் யாருக்கு தெரியுமா..!

Advertiesment
சாக்லெட் கொடுத்து கண் அடித்த கமல் யாருக்கு தெரியுமா..!
, சனி, 20 ஜூலை 2019 (15:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் இணையத்தில் வெளிவந்துள்ளது. 


 
கெத்தான தோற்றத்தில் ஸ்டைலான கமலின் பேச்சுடன் இந்த ப்ரோமோ ஆரம்பிக்கிறது. "மாத்தி மாத்தி பேசுறது அணி மாறுவது இதெல்லாம் இப்போ இந்த வீட்டில் சகஜம் ஆகிவிட்டது. ஆனால் இதில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், இதெல்லாம் ஒரு பதவி மோகத்திற்காக அல்ல ஒருவிதமான மோகம் என்று கூறி முணுமுணுத்த கமல்...தமிழில் சொல்லவேண்டுமென்றால் 
ஃபீலிங்க்ஸ்.... நினைத்தாலே இனிக்கும்  என்று கூறியவாறே பாக்கெட்டில் இருந்து சாக்லெட் ஒன்றை எடுத்து காட்டுகிறார்.   
 
உடனே அந்த அரங்கம் ரசிகர்களின் கைதட்டலால் அதிர்கிறது. இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள்  என்பது தான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. மோகன் வைத்யா வெளியேறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் சாக்ஷிக்கு நிச்சயம் குறும்படம் காட்ட வேண்டுமென ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம போல்ட்!! பாராட்டு மழையில் அமலா பால் - ஆடை விமர்சனம்!