Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அம்மா பேய்... காட்டு பூனை மாதிரி ஒரு போஸ் இதுக்கு தத்துவம் வேற ஒரு கேடு!

Advertiesment
அம்மா பேய்... காட்டு பூனை மாதிரி ஒரு போஸ் இதுக்கு தத்துவம் வேற ஒரு கேடு!
, சனி, 12 செப்டம்பர் 2020 (08:28 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள்.

பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

அந்தவகையில் கடந்த சில தினங்களாக மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி இணையவாசிகளை வாய்பிளக்க செய்த ஜூலி தற்ப்போது மீண்டும் பழைய குருடி... கதவை ‌திறடி என்பது போல எல்லோரும் பார்த்து கிண்டலடிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். உடல் முழுக்க கருப்பு பெயின்ட் அடித்துக்கொண்டு "நிறம் காரணமாக மக்களை வெறுப்பது தவறு" என்று தத்துவ மழை பொழிந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரியை ஹீரோவாக்க விரும்பும் இயக்குனர்கள்… வெற்றிமாறனுக்கு வெயிட்டிங்!