கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனுயா, முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதன் ஏமாற்றம் காரணமாக பிக்பாஸ் அக்ரிமெண்ட் குறித்து ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்து பத்திரிகையாளர்கள் அவரிடம் துருவி துருவி கேட்கின்றார்கள்.
ஆனால் அனுயா எதற்குமே வாயை திறக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியில் பேசக்கூடாது என்று அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டிருப்பதால், எதையும் என்னால் வெளியே கூற முடியவில்லை' என்று கூறினார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரிடமும் பாஸ்போர்ட், ஆதார் கார்டு உள்பட முக்கிய ஆவணங்களை வாங்கி வைத்துள்ளதாகவும் பிக்பாஸ் ரகசியங்களை வெளியே கூறினால் சம்பளம் உள்பட எதுவுமே கிடைக்காது என்ற கண்டிஷன் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது போகபோகத்தான் தெரியும்