Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூலிக்கு எதிராக ஒன்றுகூடிய பிக் பாஸ் குடும்பம்: எதிர்பாராத திருப்பம்!

ஜூலிக்கு எதிராக ஒன்றுகூடிய பிக் பாஸ் குடும்பம்: எதிர்பாராத திருப்பம்!

Advertiesment
ஜூலிக்கு எதிராக ஒன்றுகூடிய பிக் பாஸ் குடும்பம்: எதிர்பாராத திருப்பம்!
, வியாழன், 27 ஜூலை 2017 (13:13 IST)
பிக் பாஸ் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோ ஒன்றில் எதிர்பாராத திருப்பங்கள் என டைட்டில் வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.


 
 
பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து காயத்ரிக்கும், ஓவியாவுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி மோதிக்கொண்டு இருந்தனர். இதனால் ஓவியாவின் செல்வாக்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துவாறே இருந்தது.
 
ஆனால் காயத்ரியின் செல்வாக்கு மோசமான நிலைக்கு சென்றது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரியும், ஓவியாவும் மனம் விட்டு பேசும் சூழல் ஒன்றை பிக் பாஸ் உருவாக்கி கொடுத்தார். இதனையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆரத்தழுவி கண்ணீர் விட்டு ஒற்றுமையானார்கள்.

 

 
 
இரு தரப்பினரும் தங்கள் தரப்பு தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் இன்று அதிரடி திருப்பமாக அனைவரையும் லிவ்விங் ஏரியாவில் அமர வைத்த பிக் பாஸ், இந்த பிக் பாஸ் குடும்பத்தில் யார் உறுப்பினராக இருக்க கூடாது என நீங்கள் அனைவரும் கூடி முடிவெடுத்தால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கிறார்.
 
அதன் பின்னர் அனைவரும் ஆலோசித்து ஓவியா தற்போது முன்னர் போல இல்லை. நிறைய மாறிட்டார். எனவே ஜூலி தான் உறுப்பினராக இருக்க முடியாது என முடிவெடுத்து அறிவிக்கின்றனர். இதனையடுத்து ஜூலி லிவ்விங் ஏரியாவில் இருந்து வெளியேறுவது போல காட்டப்படுகிறது.
 
இதனால் தற்போது எதிர்பாராத திருப்பமாக ஜூலிக்கு எதிராக பிக் பாஸ் குடும்பம் முழுவதும் ஒன்று கூடியுள்ளது. முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஓவியாவை ஆதரித்துள்ளனர். ஆனால் இது ஒருவகையான டாஸ்க்குக்காக பிக் பாஸ் கேட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரள நடிகை கடத்தல் வழக்கு - போலீசாரிடம் காவ்யா மாதவன் அளித்த பதில் என்ன?