பிக்பாஸ் போட்டியாளரை கண்டபடி திட்டி டுவீட் செய்த நடிகை ஹன்சிகா

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:40 IST)
ஹிந்தி பிக்பாஸில் தற்போது 11வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் நடிகை ஹினாகான் பேசியது பெரும் சர்ச்சையாகி வருகிறது. அவரது பேச்சைக் கேட்டு நடிகை ஹன்ஷிகா கோவமாக திட்டி ட்வீட்  செய்துள்ளார்.

 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் நடிகை ஹினாகான், தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் குண்டாக இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என தென்னிந்திய இயக்குநர்கள் நடிகைகளை எடை அதிகரிக்கும்படி கூறுவது வழக்கம் என ஹினா கான் கூறியுள்ளார்.


 
இந்த நிலையில் ஹினா கானின் பேச்சு, தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகைகள் பற்றி பேசியது பலருக்கும் கோபத்தை  உண்டாக்கியுள்ளது. மேலும் நடிகை ஹன்சிகா நீங்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? நீங்கள் தென்னிந்திய திரையுலகத்தை அவமதிக்கிறீர்களா? எனக் கேட்டு #shamehinakhan என ட்வீட் செய்துள்ளார்.


 
தென்னிந்தியப் படங்களில் பல பாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள், தற்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்  என்பது பாவம் ஹினாகானுக்கு தெரியவில்லை போலும் எனக் கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா. மேலும் 'ஹினாகான் என்ன  உளறினாலும், ஒரு தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகை என்பதில் நான் பெருமைப்படுவதாகவும், தொடர்ந்து கோபம்  தணியாமல் பதிலடி கொடுத்த நடிகை ஹன்சிகா 'ஹினா கான் கூறியது முற்றிலும் புல்ஷிட்' என கோபத்துடன்  பதிலளித்திருப்பதை பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

பிரபுதேவா & ரஹ்மான் கூட்டணியின் ‘Moon walk’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments