Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆமாம் என் மார்பகம் பெரியதுதான்… பிக்பாஸ் அபிராமி டிவீட்!

ஆமாம் என் மார்பகம் பெரியதுதான்… பிக்பாஸ் அபிராமி டிவீட்!
, புதன், 7 ஏப்ரல் 2021 (14:12 IST)
அபிராமியின் உடல் குறித்து கேலி செய்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் ஒரு டிவீட்டை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும் சமூகவலைதளங்களில் அவருக்கென்று குறிப்பிட்ட பாலோயர்கள் உள்ளன.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் பதிவேற்றும் புகைப்படங்களில் சிலர் அவர் உடலை கேலி செய்து கருத்திட்டு வந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அபிராமி ‘என் மார்பளவு பெரியதாக இருப்பதைப் பற்றி எனக்கு கருத்துக்கள் சொல்லி வருகின்றனர். ஏனென்றால் நான் ஒரு தென்னிந்திய பெண். இது என்னை உங்களிடம் இருந்து வேறுபடுத்தும் அம்சமாக இருக்கலாம். நீங்கள் உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகுக்கு வந்திருக்க முடியாது. என் மார்பகங்களை பற்றி பேசும் முன் உங்கள் தாயிடம் பால் குடித்ததை நினைத்துக்கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக்கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்தகன் படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகர்!