அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (15:07 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்தின் ஷுட்டிங் அக்டோபர் தொடக்கத்தில் துபாயில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்னொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே மகிழ் திருமேனியின் கலகத்தலைவன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் இசை வெளியீட்டு நிகழ்ச்சியா… இல்லை கான்செர்ட்டா?.. குழம்பும் ரசிகர்கள்!

அந்த வார்த்தையை எல்லாம் படத்தில் வைக்க முடியாது… சென்ராயனுக்கு கீர்த்தி சுரேஷ் பதில்!

நான் என்ன செஞ்சேன்?.. என்னை மோசமானவன் போல காட்டிவிட்டீர்களே! கங்கை அமரன் ஆதங்கம்!

அஞ்சான் தோல்விக்குப் பொறாமையும் ஒரு காரணம்… wanted ஆக வண்டியில் ஏறும் இயக்குனர் லிங்குசாமி !

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments