Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவானி - பயத்தில் ரியோவுக்கு டப்பா டான்ஸ் ஆடுது!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (10:19 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்று சனம் ஷெட்டி மற்றும் சுரேஷுக்கு இடையேயான பிரச்சனை கொஞ்சம் சூடு  பிடித்து நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால், சுரேஷ் பாவம். அவர் விளையாட்டுக்கு பண்ணினார். அதை கோபப்பட்டு பெரிது படுத்திய சனம் வயது வித்தியாசம் பார்க்காமல் அவரை வாடா போடா என்றது மிகவும் தவறு.

இதற்காக அர்ச்சனா சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்தார். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் தலைவராக முயற்சிக்கிறார். எல்லாருரையும் அடக்கி வைப்பது , நியாயம் பேசுவது என அர்ச்சனா தான் ஒரு பாகுபலி சிவகாமி போல் நடந்துக்கொண்டு சுரேஷை கட்டப்பா ரேஞ்சிற்கு அடக்கி ஆள நினைக்கிறார். சுரேஷ் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்க வச்சாங்க. ஆனால், சனம் மரியாதை குறைவாக பேசியதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவில்லை?

நேற்று ஷிவானியின் குரலும் வீட்டில் ஒலித்தது. இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வழக்கம் போலவே ரியோ தர்பார் பேச்சு பேசுகிறார். ஷிவானியை மறைமுகமாக தாக்க அவர்களுக்குள் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. குருப்பிசம் பேசி பேசி நடிக்கும் ரியோவை ரம்யா பாண்டியன் வெளுத்து வாங்கிவிட்டார். ரியோ ரொம்பவே விடந்தா வாதம், வாக்குவாதம் பேசி தான் பாப்புலாரிட்டி என்பதை காட்டிக்கொள்கிறார். அவர் சேர்த்து வைத்த பேரு பிக்பாஸில் வந்து மொத்தமா அழிஞ்சு போச்சு. ரம்யா... நல்லா நாக்கு புடுங்குற மாதிரி கேளுங்க " ரியோ குற்றமுள்ள நெஞ்சே குருகுருக்கும்"

தொடர்புடைய செய்திகள்

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments