Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போகாதடா..! கதறிய லொஸ்லியாவை உதறிவிட்டு வந்த கவின்!

போகாதடா..! கதறிய லொஸ்லியாவை உதறிவிட்டு வந்த கவின்!
, வியாழன், 26 செப்டம்பர் 2019 (12:13 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான  இரண்டாவது ப்ரோமோ வீடியோ  சற்றுமுன் வெளிவந்துள்ளது. கவின் வீட்டை விட்டு வெளியேறுவாரா ? மாட்டாரா! என்பதை காண நேற்றிலிருந்தே மக்களை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்துள்ளது விஜய் டிவி. 


 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், கவின் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். கவின் வெளியேறுவதை தாங்கிக்கொள்ளமுடியாத லொஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார் " கவின் ப்ளீஸ் போகாதடா.. என கூற அதற்கு கவின் " உன்கிட்ட நான் சொன்னதை மட்டும் நியாபகம் வைத்துக்கொண்டு ஒழுங்கா இரு என அட்வைஸ் கொடுக்கிறார். அதற்கு லாஸ் " எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை ... எதுமே நியாபகமில்லான அந்த போட்டோவை எடுத்து பாரு நியாபகம் வரும் என கோபத்துடன் போட்டோவை எடுத்து லொஸ்லியாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார். 
 
கவின் வெளியேறுவதை எண்ணி  லொஸ்லியா , சாண்டி மட்டும் தான் வருத்தப்படுகின்றனர் " மற்ற மூவரும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதை பார்த்த நெட்டின்ஸ் " டேய் நீ இன்னும் போகலையாடா என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் அபிராமியின் ரீசென்ட் கிளிக்ஸ்!