Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் 2-வது சீசன் தொடக்கம்; விரைவில் அறிவிப்பு

Advertiesment
பிக்பாஸ் 2-வது சீசன் தொடக்கம்; விரைவில் அறிவிப்பு
, திங்கள், 19 பிப்ரவரி 2018 (15:13 IST)
பிரபல தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. ஆரம்பத்தில் பல  எதிர்ப்புக்கள் இருந்தாலும், பிறகு ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. பிக்பாஸ் 1 சீசனை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்காகவே  நிகழ்ச்சி அதிகம் பிரபலம் ஆனது.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி பல சர்ச்சைகளைச் சந்தித்து ஒரு வழியாக 100 நாட்கள் நிறைவடைந்தது. அதில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது.
 
பிக்பாஸ் சீசன் 2-வை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் சூர்யா தரப்பினர் இந்த செய்தியை மறுத்தனர். கமல்ஹாசன்  தற்போது அரசியலில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.  மேலும் சீசன் 2 ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 2 குறித்த அறிவிப்பை விரைவில் பிக்பாஸ் தயாரிப்புக் குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘பிக் பாஸ்’ சினேகன் நடிக்கும் ‘பனங்காட்டு நரி’