Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆனி தேரோட்டத்தில் அட்ராசிட்டி செய்த லாஸ்லியா ஆர்மி!

Advertiesment
ஆனி தேரோட்டத்தில் அட்ராசிட்டி செய்த லாஸ்லியா ஆர்மி!
, செவ்வாய், 16 ஜூலை 2019 (21:00 IST)
பிக்பாஸ் முதல் பாகத்தில் ஓவியாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்ததோ அதற்கு இணையான வரவேற்பு தற்போது லாஸ்லியாவுக்கு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள் தினமும் அவர் குறித்து ஏதாவது ஒரு ஹேஷ்டேக்கை டிரெண்டுக்கு கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்ட விழாவில் லாஸ்லியா ஆர்மியினர் போஸ்டர் அடித்து அசத்தியுள்ளனர்.  அந்த போஸ்டர் 'அடியே பெண்ணே உன்னை பார்த்தால் போதும்' 'வேறு எதுவும் வேண்டாம்' என்ற வாசகங்களுடன் காணப்படுகிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா ஒருவர் மட்டுமே எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் அமைதியாக, அதேநேரத்தில் ஆழமாக மற்றவர்களை கவனித்து வருகிறார். கடந்த வாரம் ஞாயிறு அன்று லாஸ்லியாவை அதிக நேரம் பேச வைத்த கமல்ஹாசன் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். குறிப்பாக லாஸ்லியா கூறிய மைனா கதை நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. லாஸ்லியாவின் கொஞ்சும் இலங்கை தமிழ், கேட்பவர்களின் மனதை மயக்கியது என்றே கூறலாம். இந்த பிக்பாஸ் சீசனில் லாஸ்லியா அல்லது தர்ஷன் ஆகிய இருவரில் ஒருவர் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதன் முறையாக ‘ அந்த படத்தில்’ நடிக்கும் ஐஸ்வர்யா ராய் ! ரசிகர்கள் உற்சாகம்