Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி மாற்றம்

Advertiesment
அரவிந்த் சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி மாற்றம்
, புதன், 25 ஏப்ரல் 2018 (12:51 IST)
அரவிந்த் சாமி, அமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் வரும் மே 11-ஆம் தேதி ரிலீஸாகிறது.
சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் மம்மூட்டி - நயன்தாராவை வைத்து தான் இயக்கிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை, தமிழில் ரீமேக் செய்துள்ளார் சித்திக். ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
webdunia
 
இப்படம் வரும் வெள்ளிக்கிழமை 27-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால், அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார், பக்கா போன்ற திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகவுள்ளதால், இந்த படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. அதனால் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’திரைப்படம் வரும் மே 11-ஆம் தேதி ரிலீஸாகிறது.
 
இதேபோன்று விஷாலின் இரும்புத்திரையின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படுக்கையை பகிர வேண்டும் என கேட்டனர் : நடிகை பாலியல் புகார்