Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திக்கேயனோடு கைகோர்த்த இயக்குனர் இமயம் !

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:09 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பாண்டிராஜோடு இணையும் அடுத்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் இயக்குனர் பாரதி ராஜா இணையவுள்ளார்.

சிவகார்த்திக்கேயன் கைவசம் இப்போது மிஸ்டர் லோக்கல், ரவிக்குமார் இயக்கும் சயின்ஸிக்‌ஷன் படம், மித்ரன் இயக்கும் ஹீரோ விக்னேஷ் சிவன் இயக்கும் புதியப்படம், கோலமாவு கோகிலா இயக்கும் புதியப்படம்  மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் படம் எனக் கைவசம் 5 படங்கள் உள்ளன.

இதில் பாண்டிராஜ் இயக்கும் படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. முதலில் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குவதாக இருந்தது. பாண்டிராஜ் இயக்கும் படத்தின் முன்தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஒப்பந்தமாகியுள்ளனர். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகெயனை மெரினா படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாக்கியவர் இயக்குனர் பாண்டிராஜ். அதன் பின்னர் இருவரும் இணைந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படமும் ரசிகர்களிடம் நல்லவரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் இருவரும் இணையும் படம் இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments