மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் அறிக்கை!

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (18:07 IST)
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:
 
 நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன். நான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பான சிகிச்சை காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் பார்க்கின்றேன்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்! என பதிவு செய்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடிக்க சொன்னதே ப்ரவீன்தான்! கம்ரூதின் சண்டையில் ட்விஸ்ட்! லீக்கான வீடியோ! Biggboss Season 9!

ஜேசன் சஞ்சய்- சந்தீப் கிஷன் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

விஜய் சேதுபதி & மிஷ்கின் கூட்டணியின் நீண்ட நாள் தாமத ‘ட்ரெய்ன்’ ரிலீஸ் அப்டேட்!

திரிஷ்யம் மூன்றாம் பாகத்தை முதலில் பார்க்க அவர்கள்தான் தகுதியானவர்கள்… இயக்குனர் ஜீத்து ஜோசப் கருத்து!

வசூலில் மோசம். இணையத்தில் ட்ரோல்கள்.. ரவி தேஜாவின் ‘மாஸ் ஜாத்ரா’வுக்கு நேர்ந்த சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments