Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜாவுடன் மோத தயாராகும் விஜய் பட தயாரிப்பாளர்: பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2020 (21:27 IST)
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலை நடத்த தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது 
 
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்ய வைக்கவேண்டும் என பலர் திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென விஜய் நடித்த மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் முரளி என்பவரும் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் முரளியை போட்டியில் இருந்து விலக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பாரதிராஜாவை தலைவராகவும் முரளியை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்க தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் முரளி சமாதானம் அடைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மெர்சல் படத்திற்கு பின் பெரும் நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படும் முரளி, திடீரென தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முன்வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் தனுஷை காதலிக்கின்றேனா? நடிகை மிருணாள் தாக்கூர் பதில்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

மஞ்சள் நிறமே… மஞ்சள் நிறமே – கீர்த்தி சுரேஷின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

முன்பதிவில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலித்த ரஜினிகாந்தின் ‘கூலி’!

வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாரா மாரி செல்வராஜ்?

அடுத்த கட்டுரையில்
Show comments