Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீஸ்ட் பொங்கல் ரிலிஸ்… அண்டை மாநிலங்களில் நடக்கும் போட்டி!

பீஸ்ட் பொங்கல் ரிலிஸ்… அண்டை மாநிலங்களில் நடக்கும் போட்டி!
, வெள்ளி, 30 ஜூலை 2021 (15:18 IST)
விஜய் நடிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார். விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக இயங்கிவருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பீஸ்ட் வெளியாகும் நேரத்தில் மகேஷ் பாபு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் படங்களும் ரிலீஸுக்கு திட்டமிட்டு இருப்பதால்  போதுமான திரைகள் கிடைப்பதில் சிக்கல் எழும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அருண் விஜௌ படம்!