நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியிட தடை கோரிய வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
நாளைக்குள் மீதமுள்ள தொகை வழங்கப்படும் என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதியின் படி நாளை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பணத்தை வழங்கி விட்டால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது