இன்றைய இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் ஒற்றுமையுடன் உள்ளனர். ஒருவர் இசையமைக்கும் பாடல்கள் இன்னொருவர் பாடி இமேஜ் இல்லாமல் இருப்பது கோலிவுட் ஆரோக்கிய பாதையை நோக்கி செல்வதை உறுதி செய்கிறது.
இந்த நிலையில் ஜெய், அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடிக்கும் 'பலூன்' படத்தில் ஓவியாவின் ஃபேமஸ் வசனமான 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்ற வரியுடன் தொடங்கும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பாடலை அனிருத் பாடியுள்ள நிலையில் இந்த பாடலின் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. 'ஷட்டப் யுவர் மவுத், நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று தொடங்கும் இந்த டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் வரும் 31ஆம் தேதி யுவன்ஷங்கர் ராஜா பிறந்த நாளில் வெளிவரவுள்ளது.