தெலுங்கு நடிகர் என் டி ஆரின் மகனான பாலகிருஷ்ணா 60 வயதுக்கு மேலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். பெரும்பாலான அவரின் படங்கள் தோல்வி அடைந்து கேலி செய்யப்படாலும், அவர் நடிப்பதை விட்ட பாடில்லை. இந்நிலையில் இப்போது அவர் சிவபக்தராக அஹோரியாக நடித்த அகாண்டா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கலக்கியது. இந்த படத்தைப் போயப்பட்டி சீனு இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே கூட்டணியில் அகாண்டா பார்ட் 2 உருவாக உள்ளதாக 2022 ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியானது. அதையடுத்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 25 ஆம் தேதி தசரா பண்டிகையை ஒட்டி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் சினிமாவில் தொடர்ந்து 50 ஆண்டுகள் கதாநாயகனாக நடித்துள்ள அவர் லண்டன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பெற்று புதிய சாதனைப் படைத்துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டு வெளியான டக்கமக்கலா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.